உலகப்போர் உருவாகிற்று
ஒரு சிற்றூரில் உள்ள
கடையில் வியாபாரி தேன் விற்றுக்கொண்டிருந்தான், விற்றதும் அவனுடைய தேன் போத்தலின் வாயை கையால்
துடைத்து விட்டு மூடி வைத்தான், அவன் கையில் படிந்திந்த தேனை
அருகில் உள்ள சுவரில் துடைத்தான், அது கலப்பட தேன் ஆதலால் சுவரில் இருந்த தேனை நோக்கி எறும்புகள் ஒவ்வொன்றாக
வரத்தொடங்கின, இதனை
கவனித்த 2 பல்லிகள் எறும்புகளை
நோக்கி நகரத்தொடங்கின அப்போது அக் கடைக்காரரின்
பூனை பல்லிகளை பிடிக்கும் நோக்கில் பதுங்கி பதுங்கிப் முன்னேறிக்
கொண்டிருந்தது. பூனையை கண்ட பக்கத்து
கடைக்காரரின் நாய் ஓடி வந்து பூனை மீது பாய்ந்து தடக்கி விழுந்தது, இதனால் கடையில் அடுக்கி
வைத்த பொருட்கள் சிதறிப்போயின, உடனே கோபமடைந்த கடைக்காரன் நாயை தடிகொண்டு அடித்தான்
இதனைக் கண்ட அதன் உரிமையாளரான கடைக்காரன் நாயை அடித்த
கடைக்காரனுடன் சண்டை பிடித்தான்,அப்போது அக்கடைக்கு வந்திருந்த பக்கத்து ஊர்க்காரரான் ஒரு வாடிக்கையாளர் சண்டை
பிடித்துக் கொண்டிருந்த இருவர் நடுவே நின்று சமாதானம் செய்து கொண்டிருந்தார்,
இதனால் சமாதானம் செய்தவர்
மேலும் ஒரு சில அடிகள் விழுந்தன,
இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களில்
ஒருவனான பக்கத்து ஊரானவன் தன் ஊர் மக்களுக்கு தொலைபேசி மூலம் எங்க ஊர்காரனை
அடிச்சிட்டான்க என்று சொல்லி மக்களை திரட்டி கொண்டுவருமாறு அழைப்பு விடுத்தான்
இரண்டு ஊர்காரர்களும் சேர்ந்தவுடன் அது ஒரு பெரிய
கிராம சண்டையாக மாறியது,அப்போது அவ்வழியாக வந்த வர்த்தக விநியோக வண்டிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்,
இதனால் நகரப்பகுதில்
இருந்த முதலாளிகளின் தூண்டுதலினால் அவை
நகர கலவரமாக மாறியது, இக்கலவரத்தினால் அடுத்துள்ள மாவட்டங்களுக்கான மக்களின் போக்குவரத்து
தடைப்பட்டது, அதனால் அது ஒரு மாவட்ட கலவரமாக உருவாகிற்று இப்பிரச்சனையால்
அயல் மாநிலங்களின் வர்த்தகம், போக்குவரத்து என அனைத்தும் பாதிக்கப்பட்டன, எனவே அது மாநில அளவில் மிகப்பெரிய கலவரமாகி நாடு
தழுவிய ரீதியில் கர்த்தாலாக மாறியது,
இக் கர்த்தால் கலவரம் என்பவற்றால் வெளிநாட்டு
உல்லாசப் பிரயாணிகள் மோசமாக பதிக்கப்பட்டனர்
அதன் விளைவாக நாடுகளுக்கிடையேயான யுத்தம் ஆரம்பமானது.
இந்த யுத்தத்தை மையமாக வைத்து சர்வதேச நாடுகள் எல்லாம் ஒன்று கூடி எந்த எந்த
நாடுகள் எந்தஎந்த நாடுகளுக்கு ஆதரவு அளிப்பது என்ற விவாதத்தினால் குழப்பம்
உண்டாகிற்று, அதுவே உலகப்போராக தொடங்கிற்று
‘’பிரச்சனைகளை
தீர்க்கும்போது அவற்றின் அடிப்படையில் இருந்து ஆராய்ந்து தீர்த்தாலே மீண்டும்
பிரச்சனைகள் உருவாகாது’’
No comments:
Post a Comment