படைத்தான் உலகத்தை
பாவிகளை உருவாக்க
அல்ல,
பாதியில் நிறுத்திடவும்
அல்ல,
பக்குவமாய் பரலோகம்
ஆக்கிடவே…
ஏவாளில் தொடங்கிய
பாவம்
எதுவரை தொடரும்
- ஆதாமைப் போல்
அற்பநேரத்தில் அறிவை
இழந்தால்
என்றும் தொடரும்
ஆக்கினைகள்
வேதம் தந்த போதனை
நியாயப்பிரமாணம்
அதனையே பாவிகள்
மத்தியில்
பக்குவமாய் வாழ்ந்து
காட்டினார்
எங்கள் இயேசுபிரான்
சிலுவை சொன்ன பாடம்-
நம் பாவங்கள்
நீங்கவே, பாதாளத்தில்
விழ அல்ல- ஆனால்
விருட்சமாய் படர்ந்து
வளர்கிறது
பாவிகள் சாம்ராச்சியம்
நீதித் தராசினிலே
தள்ளாடுகின்றன
நியாயப்பிரமாணமும்,
பாவத்தின் சம்பளமும்
என்று காண்போம்
சமநிலை
யுத்தங்களும், சத்தங்களும்,
கொடூரங்களும், வன்மங்களும்,
இன்றல்ல, நேற்ரல்ல
– காயீன்
முதல் ஆரம்பித்தவையே
சரீரப் பிரகாரமய்
வாழ்வோன்-பாவத்திலே
வீழ்கிறான்-பரிசுத்த
இருதயத்தில் வாழ்வோன்
இறுதிவரை இன்பமாய்
நிலைத்திடுவான்- இதனை
நன்கு அறிந்து ஆராய்ந்தால்
அதுவே யதார்த்தம்
பணம், பொருள், மது,
மாது இவைகள் என்றுமே- மனித
மனங்களை மாற்றி
தறிகெட்ட வாழ்வை உருவாகும்
தளராத மன உறுதியுடன்
அவர் சமுகத்தில்-நிலையாய்
நிற்போனே நித்திய
ஐஸ்வர்த்தைக் காண்பான்
பண்பாடு, கலாச்சாரம்,
நாகரீகம் என்ற பெயரில்-ஆன்மீகம்
படுகுழியை நோக்கி
செல்கிறது-பாவமோ படி ஏறிச் செல்கிறது
கழிவறை தொட்டு பாலியல்முதல்
பழக்க வழக்கங்கள் வரை
எல்லாமே எப்படி
எப்படி அமைய வேண்டும்- என்று
வேதத்தில் அன்றே
வகுத்து கொடுத்து விட்டார்
ஏன்?, எங்கே?, எப்படி?,
எதற்கு?, என்ற கேள்விகள்
இல்லாமல் வாழ்க்கை
இல்லை,- வாசிப்பதால் மனிதன்
பூரணமடைகிறான்,-
கேள்வி கேட்பதால் தெளிவு
பெறுகிறான்- நல்ல
ஞானத்தை பெறவே சொன்னார்
தட்டுங்கள்
– திறக்கப்படும்
கேளுங்கள் –
கொடுக்கப்படும்
தேடுங்கள்
- கண்டடைவீர்கள்
உலகம் உயர் நிலை
பெறவேண்டும் -அதன்
உண்மை நிலையை ஆராய்ந்து
அறிய வேண்டும்,
எல்லாம் எழுதப்ப்ட்டவையே
என்கிறது வேதம்.
அரசன் அன்றே கொல்வான்,
தெய்வம் நின்று கொல்லும்
இது முன்னோர் மொழி-உலகத்தின்
கண்களுக்கு
உண்மை நிலைமை அறியாது-உள்ளத்தின்
ஆழத்திலேதான்
உணரமுடியும், இதை
சொல்லித் தெரிவதில்லை
அனுபவத்தால் மட்டுமே
அறியலாம்,
தெளிந்த ஞானமில்லா
வாழ்வு- பாதாளத்தை
நேக்கியே செல்லும்,
ஞானத்தை தேடுவோனே
ஆண்டவருக்கு பயப்படுதலே
ஞானத்தின் ஆரம்பமாகும்
பாதை எங்கே? பயணம்
எங்கே? என்று பாதி
வழியில் பரிதவிப்போனே-
இரட்சிப்பின்
வழியில் இறங்கி
- இறைவன் சித்தம் நடந்தால்
இன்ப வாழ்வைக் காண்பாய்
இது என்றுமே நிதர்சனம்
பாரிய அலை மோதும்
சமுத்திரத்திலே –உன்
வாழ்க்கைப் படகு
தத்தளித்து செல்கிறது -இரட்சிப்பு
எனும் திசைகாட்டி
மூலம்-அவர் வார்த்தையில் வழி
நடந்தால் –வெற்றி எனும் துறைமுகத்தில் நங்கூரமிடுவாய்
நாத்திகம் என்றுமே
தித்திக்கும் விசாலமான பாதைகள்
ஆன்மீக பாதை என்றுமே
கரடுமுரடு ஆனதாக தோன்றும்
மெய்வாழ்வை நோக்கிச்
செல்லும் வாசல் இடுக்கமும்-வழி
நெருக்கமுமாய் இருக்கும்
– என்றார்
இடுக்கண்ணில் வீழ்வோரே
அதிகமாய் இறைவனைத் தேடுகிறான்
ஆகவேதான் வருத்தப்பட்டு
பாரம் சுமக்கிறவர்களே
நீங்கள் எல்லோரும்
என்னிடத்தில் வாருங்கள் நான்
உங்களுக்கு இளைப்பாறுதல்
தருவேன் – என்றார் (மத்11-28)
சொந்த பந்த உறவுகள்
வெறுத்தாலும் –அவர்
நெறியில் நிற்போரை
வேதம் சொல்கிறது
கலங்காதே திகையாதே
நம் தேவன்
உன்னோடு இருக்கின்றார் (யோசுவா 1-9)
வாழ்க்கைப் பாதையிலே
பாவச்சேற்றிலே மிதித்தவன்
திக்குத்திசை தெரியாது
திண்டாடுவான் –அவன்
பாவ மன்னிப்பு பெற்று
இரட்சிக்கப்பட்டால்
திக்கற்றவர்களாக
என்றும் விடமாட்டேன் =என்றார் (யோவான்
14-18)
முகம் பார்த்து
முகத்துதி செய்யும் -இவ் உலக
மனிதரின் இருதயங்களை
ஆராய்ந்து அறிகின்றவர்
உன்னை விட்டு விலகுவதும்
இல்லை - உன்னை
என்றும் கை விடுவதும்
இல்லை (உபாகமம்31-6)
இயேசு, யோபு, பவுல்
என எவரையுமே விட்டு வைக்காத சத்துரு
எம்மை மட்டும் விட்டு
வைப்பானா? -ஊழியப் பாதையில்
காலடி வைத்தவன்
இடுக்கண் காண்பது நிச்சயமே,
நிலையான மன உறுதியுடன்
பற்றி நிற்போரை
உன்னை வாலாக்காமல்
தலை ஆக்குவேன் –என்றார் (உபாகமம்28-13)
உன்னைத் திருத்திக்கொள்
சமூகம் தானாகவே திருந்தும்
என்ற விவேகானந்தருக்கு
முன்பே –
உன் கண்னில்
உள்ள துரும்பை நோக்காது
- பிறர் கண்ணின்
துரும்பை நோக்குவது
ஏன்? – என்றார் (மத் 7-3)
ஒரு பொய்யை சொன்னால்
அதனை மறைக்க
ஆயிரம் பொய் சொல்ல
வேண்டி வரும் என்பர் -ஆகவே
கொஞ்சத்திலே உண்மையாய்
இருந்தால்
அதிக அளவில் அதிபதியாய்
இருப்பாய் –என்றார் (லூக்கா 16-10)
பாவம் இல்லா வாழ்க்கை
வாழ நல் விடயங்களை பார்ப்பதும்,
படிப்பதும், கேட்பதும்,
பேசுவதாலும் அல்ல, அவற்றை எல்லாம்
நடைமுறைப் படுத்துவதனாலேயே-
என் வசனங்களைக் கேட்டு
அதன்படி நடப்பவர்களே
எனக்கு பிரியமானவர்கல் – என்றார்
நான் சொல்லிய வார்த்தைகளைக்
கேட்டு அதன்படி
செய்கிறவன் எவனோ
அவனைக் கன்மலையின் மேல்
தன் வீட்டைக் கட்டிய
அறிவுள்ள
மனிதனுக்கு ஒப்பிடுவேன்
– என்றார் (மத்தேயு 7-24)
பாவத்தில் வீழ்வது
இயல்பானதே,- பாவியாக கிடப்பதே
கேவலமானது, பாவியே
உன்னை பரிசுத்தவானாய் மாற்றவே
10 கட்டளைகளையும்
கொடுத்தார். வேதத்தின் மூலம்
வார்த்தைகளையும்
கொடுத்தார்,வாழ்ந்தும் காட்டினார்
வேதத்தின் தத்துவங்களை
காது உள்ளோன்
கேட்கக் கடவன்-
என்றார். இன்று நாம் படிப்பறிவு
உள்ளோன் படித்தறியக்
கடவன், பகுத்தறிவு உள்ளோன்
ஆராய்ந்து அறியக்
கடவன் என்போம், அவர் வசனங்கள்
என்றுமே இருபுறமும்
கருக்குள்ள பட்டயமே
No comments:
Post a Comment