மண்வாசனை
மிகவும் பின்தங்கிய
கிராமத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் தாயின் அரவணைப்பின்றி தந்தையின் கண்டிப்பில்
அந்த ஊரையே சுற்றி சுற்றி வலம்வரும் அந்த பேரழகிக்கு வயது 20 தான்.
ஆனாலும் பாவாடை தாவணியுடன் பொட்டு வைத்து பூச்சூடி அழகிய
இளம் அப்பாவி பெண்ணாகவே எப்போதும் சுற்றித் திரிவாள். அவர்கள் குடும்ப வறுமை நிலை கண்டு தந்தையின் நண்பர் சிங்கப்பூரில் தேவதைக்கு
ஒரு வேலை வாய்ப்பை வாங்கிக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
அதே ஊரில் மாடி வீட்டில் வசிக்கும் சிங்கப்பூர் பென்சனியர்
என்பவர் அடிக்கடி தனது பென்சன் பணத்துக்காக சிங்கப்பூர் சென்று வருவது வழக்கம்.
மகளை வெளிநாடு அனுப்பியவரும் பென்சனியரிடம் வந்து அடுத்த தடவை போகும்போது எனது மகளை
பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டார்.
சிங்கப்பூர் சென்ற பென்சனியர் அவரின் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு அவளுடன் எதுவுமே பேசாமல் ஊருக்கு
வந்து அவளின் தந்தையிடம் உடனே உனது மகளை கூப்பிடு இனிமேல் சிங்கப்பூரே வேண்டாம்
என்று சொல்லி கண்ட பாட்டுக்கு அவளைத் திட்டினார்.
தொலைபேசி எடுத்து வரும்படி மகளை அழைத்ததும், மறுநாளே ஊருக்கு
வந்தாள். வந்தவள் வழமை போல கிராமத்து
பெண் போலவே எப்போதும் போல் அதே பாவாடை தாவணி போட்டு பூவு பொட்டு என மிகவும் அப்பாவி பெண்ணாகவே காட்சி
அளித்தாள். அதனைப் பார்த்த பென்சனியருக்கு
ஆச்சரியத்தின் மேல் ஒரே ஆச்சரியம். தான் பார்த்த பெண் இவள்தானா? என்ற ஒரே
குழப்பத்தில் இருந்தார்.
தந்தையாரும் நல்லா பாரு இவள்தானா? நீ பார்த்த பொண்ணு
இவளா? நீ கண்டபடி
திட்டினாய். எனது மகள் மிகவும்
ஒழுக்கமாக வளர்ந்தவள் அவளைப் போல யாருமே நல்லவள் இல்லை என்று மிகவும் பெருமை
பட்டார் .
அவள் மீண்டும் சிங்கப்பூர் போய்விட்டாள். பென்சனியரும் அடுத்த தடவை போகும்போது அவரின் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கோபப்பட்டு அவளிடம் எதுவும் பேசாமல் வந்து விட்டார்.
வரும்போது சிங்கப்பூரில் அந்த நாட்டு மண் சிறிதளவு எடுத்து ஒரு பொட்டலமாக
கட்டிக் கொண்டு வந்தார்.
ஊருக்கு வந்தவர் அவளின் தந்தையிடம் இப்போது உனது மகளை
உடனடியாக கூப்பிடு என்றார். அவரும் தொலைபேசி எடுத்தார். மறுநாளே ஊருக்கு வழமைபோல் கிராமத்து
பெண்ணாகவே வந்தாள் அதைப் பார்த்த பென்சனையரும் அவளை அருகே வரும்படி அழைத்து அவள் முன்னால் தான்
கொண்டு வந்த அந்த சிங்கப்பூர் மண் பொட்டலத்தை அவிழ்த்து அந்த மண்ணை அவள் முன்னால் வட்டமாக
தூவி விட்டார்.
‘‘மகளே தற்போது இந்த மண் மீது வந்து நில்‘‘ என்றார்.
மண் மீது அவள் வந்து நின்றதும் அடுத்த கணமே தனது உடைகளை எல்லாம் களைந்து எறிந்து விட்டு 2 பிட்டு துணியுடன் காபரே நடனம் ஆடத் தொடங்கினாள்.
ஆகவே நீங்களும் பாராளுமன்றத்தில் கதிரைவாசனையை நுகர்வீர்கள்
--ஒசன்னா ரவி--
No comments:
Post a Comment