அரசியல்
சாப்பாடு -சிறுகதை-
தேர்தல் காலம் நெருங்கியதும் ஒரு அரசியல்வாதி தனது தொகுதி
ஞாபகம் வந்ததும் வாக்கு கேட்கும் நோக்கத்துடன் 5 வருடத்தின் பின்னர் தனது தொகுதிக்கு மீண்டும் தன் அல்லக்கைகள் மற்றும் யூப்டியூப் மீடியாக்களையும் அழைத்துக் கொண்டு-
சென்றான்.
ஊருக்குள்ளே போகும்போது வீதியோரத்தில் இருவர் புல்களை
தின்று கொண்டு இருந்தனர். அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு தனது வாகனத்தை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று
ஏன் புற்களை தின்கிறீர்கள்
என்று விசாரித்தார்.
எமது கிராமத்தில் ஏற்பட்ட மிகவும் வறட்சி நிலைமையினால் எமக்கு
எந்த வேலையும் இல்லை, எந்தவித வருமானமும் இல்லை அதனால் புல்களை தின்று இந்த குட்டையில் தண்ணீரைக் குடித்து உயிர் வாழ்கின்றோம் என்றனர் .
அரசியல்வாதியோ கவலைப்படாதீர்கள் இனி நான் வந்து விட்டேன்
உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லா பிரச்சனையும் தீர்த்து விடுகிறேன் என்று கூறிவிட்டு நீங்கள்
என்னுடைய வீட்டுக்கு வாருங்கள் உங்களுக்கு சுத்தமான உணவும் தண்ணீரும் தருகின்றேன்
என்றான்.
அப்பொழுது அதில் ஒருவன் எனக்கு மனைவியும் 5 பிள்ளைகளும்
இருக்கின்றனர் என்றார். அதற்கு மற்றவனும் எனக்கும் மனைவியும் 7 பிள்ளைகளும் இருக்கின்றனர் என்றான்.
அரசியல்வாதியோ பிரச்சினை இல்லை அனைவரையும் அழைத்து
வாருங்கள் எனது வீட்டுக்கு செல்லலாம் என்று அனைவரையும் தனது அல்லக்கைகளிடம் கூறி வாகனத்தில் ஏற்றி வீடியோ போட்டோக்களை எடுத்தனர்.
அப்பொழுது அங்கிருந்த யூடிபர்களும் அந்த அரசியல்வாதியை
பற்றி புகழ் பாடி கடவுளுக்கு நிகராக அவரை பரப்புரை செய்து தமது மீடியா தளத்தை
வலுப்படுத்திக் கொண்டார்கள்.
பின்னர் தனது ஊழலினால் கட்டப்பட்ட மாளிகை போன்ற வீட்டிற்கு அழைத்து சென்றனர் . அங்கே தனது சொகுசு மாளிகையின் பின்பக்கம் அவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று அங்குள்ள சிறிய மைதானம் போல் உள்ள மிகவும் பச்சைப் பசேல் என்று இருக்கும் புல்தரையை காட்டி இதுவரை காலமும் நீங்கள் புல்லே தின்று வளர்ந்தீர்கள்.
ஆனால் தற்சமயம் இந்த புல்கள் மிகவும் தரமானவையாகவும் சுத்தமாகவும் இருக்கின்றது. அங்கே உங்களுக்கு சுத்தமான தண்ணீரும் குழாயில் வருகின்றது. அவற்றை தின்று குடித்து இங்கேயே இருங்கள் தேர்தல் முடிந்ததும் உங்களுக்கான தரமான உணவுகள் சமைத்து வழங்குவதற்கு ஒழுங்கு செய்கின்றேன் என்றான். .
அப்படியே மைதானத்தை விட்டு வெளியே வந்த அரசியல்வாதி தனது
அல்லக்கைகளுக்கு இந்த புற்கள் மிகவும் அதிகமாக வளர்ந்து விட்டது எனக்கு தற்போது வெட்டுக் கூலியும் இல்லை, மெசினும் தேவையில்லை, கூலியாக்களும் தேவையில்லை, குப்பை கொட்டும் வேலையும் இல்லை.இவர்களே எல்லாம் செய்து விடுவார்கள்.
தனது ஊழலினால் பெற்றெடுத்த சொகுசு வாகன காரில் விரைந்து
சென்றான்
அப்படியே காரில் சொர்க்கமாக தெரியும் அடுத்த 5 வருட கனவில் மிதந்து கொண்டு சென்றான்.
-ஓசன்னா ரவி-
No comments:
Post a Comment